பேராவூரணியில் உயர் படிப்பிற்கான முன்பதிவு அலுவலகம் திறப்பு.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பல ஆண்டுகளாக ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி ஆலோசனை வழங்கி வரும் நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை. இதன் செயல் அலுவலகம் பேராவூரணி புதிய பேருந்து நிலையம் எதிரில் புதிதாக திறக்கப்பட்டது. தனலெட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்திகான (சென்னை. திருச்சி . கோவை . பெரம்பளூர்) அட்மிஷன் அலுவலகம் கல்வி குழும மேளாலர் ஜெயப்பிரகாஷ் அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
முன்னதாக ஏ.எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் முன்னால் எம்.எல்.ஏ. சிங்காரம். ஒன்றிய கவுன்சிலர் அருள் நம்பி. பேருராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர். ஆசியா டவர் சேக் முகமது. மற்றும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன் .
No comments:
Post a Comment