தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகத்தின் உலக நாடக நாள் தொடக்க விழா.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் நாடகத்துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் உலக நாடக நாள் தொடக்க விழா பனுவல் அரங்கத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது .
இவ்விழாவில்
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
கலைப்புல முதன்மையர் , பேராசிரியர் இளையாப்பிள்ளை முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக நாடகத்துறை தலைவர், முனைவர் சீ வீரமணி வரவேற்றுப் பேசினார்.,
சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர் நெருஞ்சி இலக்கிய இயக்கம் கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சீனிவாச அய்யர், தமிழ் பல்கலைக்கழக பதிவாளர்(பொ) சி.தியாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்.தொடர்ந்து நாடகத்துறை ,கௌரவ உதவிப் பேராசிரியர் முனைவர் ப.ரெங்கராஜ் இணைப்புரையாற்றினார். நிறைவில் நாடகத்துறை கௌரவ உதவிப் பேராசிரியர் ஏ வெங்கடேசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment