அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை ஒட்டி அதிமுகவினர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
முன்னாள் எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமையில் முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட அமைத்தலைவருமான எஸ்.வி. திருஞானசம்பந்தம் முன்னிலையில், அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். இதில், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் நீலகண்டன், அதிமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன், அருணாசலம், நகரச் செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment