தஞ்சை மாவட்டம், பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் மாண்புமிகு, தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் வசதிக்காக பேராவூரணி கிளை நகர் பேருந்து தடம் எண் பி96 மூலம் பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாநகர் ,இந்திராநகர். சுமைதாங்கி, தூராங்குடி, பெருமகளூர், பூக்கொல்லை வழியாக பேராவூரணிக்கு இரண்டு நடைகள் தட நீடிப்பு செய்தும், பேராவூரணி கிளை நகர்பேருந்து தடம் எண் ஏ1 பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து முடச்சிக்காடு அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டு நடைகள் இயங்கும் பேருந்தை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் .விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோட்ட மேலாளர்
ஏ.தமிழ்செல்வன், பேராவூரணி கிளை மேலாளர் கே .மகாலிங்கம் மற்றும் மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர்,பேராவூரணி திமுக ஒன்றிய செயலாளர்கள் க.அன்பழகன் ,இளங்கோவன் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம்,பேராவூரணி பேரூராட்சிபெருந்தலைவர் சாந்திசேகர், நகரச் செயலாளர்
என்.எஸ்.சேகர், அரசுகல்லூரிமுதல்வர் (பொறுப்பு ) ராணி , பொதுக்குழு உறுப்பினர் அ .அப்துல்மஜீது, சுற்றுச்சூழல் அணி வே.கார்திகேயன், மீனவரணி ஜெயபிரகாஷ், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனிவேல்சங்கரன், மகாலெட்சுமிசதீஸ்குமார், ஆர்.பிரபு, உள்ளிட்ட போக்குவரத்து கழகத்தினர் கலந்துகொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment