தஞ்சையில் செயின் மேரிஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தஞ்சாவூர் செயின் மேரிஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பசுமை நாயகன் ஸ்டீபன் வில்லியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.பள்ளி தாளாளர் லாரன்ஸ் வரவேற்றார்.
இதில் எல்.கே.ஜி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.சுமார் 800-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு இந்த அறிவியல் கண்காட்சியை கண்டு களித்து சிறப்பித்தனர் அனைவருக்கும் மரக்கன்றுகள் அளிக்கப்பட்டது இந்த அறிவியல் கண்காட்சி அனைத்து நிகழ்வுகளையும் ஏற்பாடுகளையும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர் நிறைவில் பள்ளி நிர்வாக அதிகாரி டோனி சுகந்த் நன்றி கூறினார் .
ஒருங்கிணைந்த விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மார்ச் 15, 2023 அன்று நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த விருது வழங்கும் விழாவில், பெற்றோர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்
No comments:
Post a Comment