தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ச.இராமநாதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மற்றும் கரந்தை தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் துவக்க விழா தமிழ்ப் பெருமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாம் துவக்க விழாவில் ,சிறப்பு விருந்தினராக ஆர் சுந்தரவதனன் எஸ் ஆர் எஸ் செந்தமிழ் செல்வன் டாக்டர் சுஷ்மிதா சரண் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமைத் துவக்கி வைத்தனா்.
முகாமில் பொது மருத்துவப் பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நுரையீரல் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், எலும்பு, மூட்டு மருத்துவம், இருதய பரிசோதனை, நரம்பியல், சிறுநீரகம், தோல், காது மூக்கு, தொண்டை, கண், பல் உள்ளிட்ட பல்வேறு பொது நல மருத்துவம், பெண்களுக்கான மாா்பக புற்றுநோய் கண்டறியும் நவீன பரிசோதனைகள், இசிஜி., எக்கோ பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் சிறப்பு மருத்துவா்கள் சுஷ்மிதா சரண்,பிரேம், ஜோன்ஸ்ஆண்டனி, அருணா ராஜி ஆகியோர் மருத்துவர்களால் சிறப்பு இலவச ஆலோசனைகளும் வழங்கப்பட்டன இத்தகைய முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்த சிறப்பு மாபெரும் மருத்துவ முகாமை ஶ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மார்க்கெட்டிங் மேலாளர் அருண்பாண்டியன் ஒருங்கிணைத்தார்
No comments:
Post a Comment