எச்.ஐ.வி. குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 20 March 2023

எச்.ஐ.வி. குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு


எச்.ஐ.வி. குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை தொடர்பு பணியாளர் திட்டத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே அலவந்திபுரத்தில் எச்.ஐ.வி. குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில்  பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களை போன்று அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி. நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் திட்ட இயக்குனர் டாக்டர் பாஸ்கர்,மாவட்ட வளர்ச்சி அலுவலர் கதிரேசன்,ஐ சி டி சி ஆலோசகர் உமா மகேஸ்வரி,ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் கிராம சுகாதார செவிலியர் விஜயா,மற்றும் பாரதமாதா கலவி குழுவினர்,துணைத் தலைவர் ரமேஷ் ஊராட்சி செயலாளர் செல்வகணேஷ், மக்கள் நல பணியாளர் மாலதி,பணி தள பொறுப்பாளர் பிரபா மகளிர் சுய உதவிக் குழு தலைவி கீதா செந்தாமரை பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad