நவீன மண்பாண்ட தொழிலின் நவீன தொழில் நுட்பம் முகாம்.
பரமக்குடி திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் மற்றும்
அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் தொழில்களுக்கான (முப்பரிமான 3D) விழிப்புணர்வு முகாம்
.கே.வி ஆர் பவணத்தில் நடைபெற்றது .
இந்த முகாமில் தேசிய தொழில்நுட்ப கழகம் இணை டீன் ஆர் ஆனந்த் ,வி. மாரியப்பன்,டி ரமேஷ்ஆகியோர் தலைமை தாங்கி
நவீன மண்பாண்ட தொழிலின் நவீன தொழில் நுட்பங்களை காணொலி மூலம் விளக்கினர்.
அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு தொழிலாளர் நலச்சங்கம்
மாநில நிறுவனர் வி தியாகராஜன், முன்னிலை வகித்தனர் .மாவட்ட தலைவர் துரை .மனோகரன், மாவட்ட கௌரவத் தலைவர் தர்மராஜ்,மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் மகளிர் அணி,வர்த்தக பிரிவு உள்ளிட பல நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முன்னதாக
சங்க மாநில நிர்வாகி மதுரை விளாச்சேரி ராமலிங்கம் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், மண் பாண்டங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு நேரடியாக காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அங்கு வந்த பொதுமக்களும், பார்வையாளர்களும் எத்தனை சிரமங்கள் என்பதை நன்கு உணர்ந்தனர். மண் பாண்டங்களை பயன்படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர்.ஆனால் இதை நாம் மறந்துவிட்டு உடல் நலத்துக்கு தீமை விளைவிக்கும் பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோம்.மண் பாண்டங்களை அனைவரும் உபயோகிப்போம் என பொதுமக்கள் கூறினர்.
இதில் 2022 ன் மழை கால நிவாரணம்உடனடி வழங்க வேண்டும்.தமிழ்நாட்டிலுள்ள மண் பாண்ட தொழிலாளர் களுக்கு. விடுபட்ட மழைக் கால நிவாரணம் அனைவருக்கும் வழங்க வேண்டும்., மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, 5% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,
அகில இந்திய குலாலர் மகளிர் குழுவிற்கு. அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். மத்திய, மாநில, KYIG,TIC கதர்கிராம வாரிய மானியத் துடன் வழங்கப்படும்.
வங்கிக்கடனை, வங்கிகள் விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment