தஞ்சை மாவட்டம், பேராவூரணி திமுகதெற்கு ஒன்றியம் சார்பில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டங்காடு கடைவீதியில், தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில், கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஒட்டங்காடு கருப்பையா உடையார் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும், பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவிகள் சுமார் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் இளங்கோவன் (பேராவூரணி வடக்கு), சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம் வடக்கு), ரவிச்சந்திரன் (சேதுபாவாசத்திரம் தெற்கு),
மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அலிவலம் மூர்த்தி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், தலைமைக் கழக பேச்சாளருமான அ.அப்துல்மஜீத், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில நிர்வாகி கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, ராஜாக்கண்ணு, ஒன்றிய அவைத் தலைவர் நீலகண்டன், திமுக இளைஞர் அணி அரசு, பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல், மா.கந்தசாமி, கிளைக்கழக செயலாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment