கும்பகோணத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கும்பகோணத்தில் இருந்து மதியம் ரயில் மூலம் சென்னைக்கு செல்ல இருந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. இது ஜனநாயகத்தின் இருண்ட நாள் என சொல்லலாம். மாவட்ட நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை இந்த தீர்ப்பின் அடிப்படையில் புரிகிறது. ஆராய்ந்து கொடுக்கப்பட்ட தீர்ப்பா? எது எப்படி இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் சாலைகளில் திரண்டு தங்களது எதிர்ப்பை காட்டுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்படுவதற்கு முன் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்திக்கு ஆதரவாக ரயில் பாதையில் ரயிலை மறித்து சுமார் 10 நிமிட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இவருடன் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன், கும்பகோணம் மாநகர தலைவர் மிர்சாவுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் மறியலில் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறையினர் இவர்களை அப்புறபடுத்தினார்கள். பின்னர் அதே ரயிலில் ஏறி கே.எஸ்.அழகிரி சென்னை புறப்பட்டு சென்றார். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment