மணல் அள்ள உரிமை கோரி உண்ணாவிரதப் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணா சிலை அருகில் ஏ.ஐ.டி.யு.சி மாட்டு வண்டி தொழிளார்கள் சங்கம் சார்பில் பேராவூரணி. பட்டுக்கோட்டை தாலுகாவிலுள்ள காட்டாறுகளில் மணல் அள்ள அரசு அனுமதி வழங்கவும். பேராவூரணி. சேதுபாவாசத்திரம். திருச்சிற்றம்பலம் ஆகிய ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் பிடித்து வைத்துள்ள மாட்டு வண்டிகளை எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி தொகுதி பொருப்பாளர் கே.எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் பா.பாலசுந்தரம் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்தார். பேராவூரணி தொகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment