இராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 19 March 2023

இராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா

.com/img/a/

IMG_20230319_215412_731
இராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா



தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையம்,பெரிய பள்ளி பரிபாலன சபை சார்பாக முப்பெரும் விழா இராஜகிரி காயிதே மில்லா திருமண மஹாலில் நடைபெற்றது. 

விழாவிற்கு நடுக்கடை பிளாக் துலிப் அதிபர் முகமது யஹயா தலைமை தாங்கி மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவியர்களுக்கு சான்றுகள் வழங்கினார். 

பெரிய பள்ளி தலைவர் யூசுப் அலி வரவேற்புரை நிகழ்த்தினார் செயலாளர் முகமது சுல்தான் ஆண்டறிக்கை வாசித்தார் முதல்வர் முகமது இஸ்மாயில் ஹஜ்ரத் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பொருளாளர் முகமது ஃபாரூக் நன்றி உரை கூறினார்

நிகழ்ச்சியில் முபாரக் முத்தவல்லி, துணைச் செயலாளர் சபீர் அகமது, உறுப்பினர்கள் பீர்முகமது, அப்துல் மாலிக், அன்வர் பாஷா, பக்கீர் முகமது, அபிப் முஹம்மது, மற்றும் ஜமாத்தார்கள், பெற்றோர்கள், ம.ம.க, தமுமுக நிர்வாகிகள்  பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

மேலாளர் தாவூத் பாஷா, முகமது உசேன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad