பேராவூரணியில் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு .திராவிட மாடல் ஆட்சி விளக்க பொதுக் கூட்டம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில்,
திராவிடர் கழகம் சார்பில், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறது. ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் இந்த பரப்பரை பயணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கலந்து கொண்டு பேசி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காந்தி பூங்கா அருகில்நடைபெற்ற பரப்புரைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான அண்ணாதுரை, பேராவூரணி எம் எல் ஏ அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, "தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி ஒப்பற்ற ஆட்சியாக மற்ற மாநிலத்தவர்கள் பாராட்டுவது மட்டுமல்ல, ஆங்கில பத்திரிகைகள் மட்டும் அல்ல,
மாற்றுக் கருத்து கொண்டவர்களும் கூட
பாராட்டுகின்றனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூட பாராட்டுகிறார். இது தான் திராவிட மாடல் ஆட்சி, இந்த ஆட்சியைக் கண்டு யாருக்கெல்லாம் மடியில் கனம் இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் பயம் இருக்கிறது.
நம்முடைய மக்களுடைய வரிப்பணத்திலே சம்பளத்தை வாங்கிக் கொண்டு இப்படி சர்ச்சைக்குரிய வகையிலே பேசினால் ஆங்காங்கே மக்கள் ஆத்திரப்பட்டு கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் சட்டம் ஒழுங்கு என அதனை காரணம் காட்டி இந்த ஆட்சியை குறுக்கு வழியிலே வேறு விதமாக ஏதாவது செய்யலாமா என ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார்., அதில் அவர்கள் ஏமாற்றம் காணுவார்கள் தமிழ்நாட்டு மக்கள் எந்த கன்னி வெடியை எப்போது அகற்றுவது என நன்றாக தெரிந்தவர்கள் " இவ்வாறு பேசினார்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment