தொண்டராம்பட்டு கிராமத்தில் பரமநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர், கங்காளேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் தொண்டராம்பட்டு மேற்கு கிராமத்தில் உள்ள சோழர் கால அம்பாள் சமேத பசுபதீஸ்வரர்,
கங்காளேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தொண்டராம்பட்டு மேற்கு கிராமத்தில் பரமநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர், கங்களாேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த சோழர்கால சிவலிங்கம் உள்ள சிறப்பு வாய்ந்த சிவத்தலங்களில் இக்கோவில் ஒன்றாகும். சிவபெருமான், தன் பக்தரான சிருத்தொண்டரின் மகிமையை பரீட்சிக்கும் விதமாக, சிவபெருமானாகத் தோன்றி, குழந்தைக்குக் கறி சமைக்கச் சொன்னதாகவும், அதற்குத் தன் ஒரே மகனான சிறுத்தொண்டர் அவர் முன் வந்ததாகவும் இக்கோயிலின் வட்டார வரலாறு கூறுகிறது. இதைக் கண்ட சிவபெருமான், தன் பக்தனின் பக்தியைப் போற்றி, தன் மகனுக்கு உயிர் கொடுத்தார் என கோயிலில் தல வரலாறு கூறுகிறது
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் அமுதுபடை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த அமுதுபடையில் சுவாமி அன்னபிரசாதம் வாங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இப்படி சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் பரமநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர்,கங்காளேஸ்வரர் மற்றும் விநாயக, பாலமுருகன், தக்ஷணாமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகம், லிங்கோத்வர், பைரவர் ஆகியோருடன் கூடிய நவக்கிரகம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இக்கோயில் கும்பாபிஷேக விழா மார்ச் 3ம் தேதி நடைபெறுகிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு. வெள்ளிக்கிழமை
காலை 9 மணிக்கு நடைபெறும்.
இதை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. அதேபோல் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.
தொடர்ந்து, 3ம் தேதி காலை 5 மணிக்கு, 6ம் கால யாகசாலை பூஜைகளும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோல் ஆதினம், திருவாரூர் மாவட்டம் வேளாக்குறிச்சி ஆதினம், திண்டுக்கல் மாவட்டம் சிவபுர ஆதினம், தஞ்சை மாவட்டம் ஆம்பலாப்பட்டு சிவராஜ மகேந்திர சுவாமிகள் முன்னிலையில், காலை 8 மணிக்கு யாத்திரை துவங்கியது. காலை 8.45 மணிக்கு கோயிலை அடைந்தார். கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து காலை 8.55 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது
.தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் திரைப்பட இசையமைப்பாளர் தேவா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மேற்கு கிராம மக்கள் செய்து வருகின்றனர்
இந்த கும்பாபிஷேக விழாவில் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பரமநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர், கங்காளேஸ்வரர்
கோவிலுக்கு வந்து பக்தா்கள் அனைவரும் வந்திருந்து தரிசித்து அருட்பிரசாதம் பெற்று பிறவிப் பயன் பெற அன்புடன் வேண்டி அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment