கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது
இப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் ஹாக்கி தேசிய விளையாட்டாகும்.விளையாட்டுகள் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதோடு ஒரு இலக்கை நோக்கி முன்னேறி செல்ல தூண்டுகோலாக அமையும். குழுவாக இணைந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்யும். சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும், தீர்க்கமாக முடிவெடுப்பதற்கும் உதவும். குழந்தைகளிடத்தில் சுய மரியாதையையும் அதிகரிக்கச்செய்யும்.
கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும்.
விளையாடுவதை வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறான போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் ஹாக்கி போட்டியினை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது இப் போட்டியினை பள்ளி தாளாளர் திரு கார்த்திகேயன் அவர்கள் துவங்கி வைத்தார்கள் . இப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக விளையாடி முதல் பரிசினை பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும், இரண்டாம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே வெற்றியாளர்களே என வாழ்த்தி சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பன்னாட்டு பள்ளி தாளாளர் திருமதி பூர்ணிமா கார்த்திகேயன் அவர்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment