தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறையால் நடத்தப்படும் காப்புரிமையின் சிறப்புகள் குறித்த சர்வதேச ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறையும் திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம்,ஔவை அறக்கட்டளையும் இணைந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையவழிப் பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பினை
06.03.2023 முதல் 10.03.2023 வரை நடத்திட உள்ளது. இன்று முதல் நாள் இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.காயத்ரி தலைமை தாங்கி உரையாற்றினார் இயக்குநர் அருட்சகோதரி டெரன்சியா மேரி முன்னிலை வகித்தார். தமிழய்யா கல்விக் கழகத்தின் தலைவர் ஔவை அடிப்பொடி முனைவர் மு.கலைவேந்தன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் காப்புரிமைச் சட்டமும் அதன் பயன்பாடுகளும் என்ற பொருண்மை யில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் சு.பசும்பொன் உரையாற்றினார்.பல்வேறு கல்லூரியிலிருந்து 90 மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முறையாக தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் க.முத்தழகி வரவேற்று பேசினார். தமிழ்த்தறைப் பேராசிரியர் முனைவர் வா.சண்முகப்பிரியா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியைத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சு சத்தியா ,தமிழய்யா கல்விக் கழகம் ஔவை அறக்கட்டளையின் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன் ஆகியோர்
ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment