திருவையாறு புஷ்பமண்ட படித்துறையில் மாசிமகத்தையொட்டி புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் மாசி மக தீர்த்தவாரி திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகிஉடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில், மாசி மகத்தை முன்னிட்டு, காலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பெரிய படிச்சட்டத்திலும் அம்பாள் சிறிய படிச்சட்டத்திலும் புறப்பாடாகி தீர்த்தம் கொடுத்து ராஜ வீதிகளில் வீதியுலா வந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தருமை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் 27-வது குருமகாசந்நிதானம் அறிவுறுத்தலின்படி ஸ்ரீ ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment