தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில்பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் நாள்
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறையும் திருவையாறு தமிழய்யா கல்வி கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இன்று இரண்டாம் நாள் நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.காயத்ரி தலைமையில் புவிசார் குறியீடு என்ற பொருண்மையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துறைத்தலைவர் மற்றும் புலத்தலைவர் தகைசால் பேராசிரியர் வீ.ரேணுகா தேவி அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் பா.அனுராதா வரவேற்புரை ஆற்றினார்.தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ரா.பரிமளா நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்வினை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் சு.சத்தியா , திருவையாறு தமிழய்யா கல்வி கழகத்தின் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன் ஐயா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்
No comments:
Post a Comment