திருவையாற்றில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 14 March 2023

திருவையாற்றில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருவையாற்றில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். 


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதானி நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடியை முதலீடு செய்யவைத்து எல்ஐசி, எஸ்பிஐ  பணத்தை காவுகொடுத்த மத்திய பாஜக அரசை கண்டித்தும், பாராளுமன்ற கூட்டு விசாரனைக் குழு அமைத்திட வலியுறுத்தி பஸ் ஸ்டான்டில் கண்டன ஆர்பாட்டம்  வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடந்தது .



இதில் வடக்கு மாவட்ட பொருளாளர் வக்கீல் முருகராஜ்,  மாவட்ட துணை தலைவர் நாகராஜன், தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர் ஆர் எம் ராஜ்,மாவட்ட துணை தலைவர்  நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலதண்டாயுதம், தியாகராஜன், திருநாவுக்கரசு, வட்டார தலைவர்கள் ராஜலிங்கம், பேச்சாளர் வெற்றிகணேசன், தமிழரசன், பேரூர் தலைவர் பசுபதி ராஜா ,தஞ்சை வடக்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் யோகா சுரேஷ் , மாநில  இலக்கிய அணி துணை செயலாளர் கணேசன், மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad