கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் மியூசிக் சேர் போட்டி.
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் மியூசிக் சேர் போட்டி பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழை பள்ளி தாளாளர் திருமதி பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அம்பிகாபதி, மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment