பாபநாசம் அருகே ராஜகிரியில் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் தேர்பவனி விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 2 February 2023

பாபநாசம் அருகே ராஜகிரியில் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் தேர்பவனி விழா

பாபநாசம் அருகே ராஜகிரியில் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் தேர்பவனி விழா சிறப்பாக நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை கிராமத்தில் அமைந்துள்ள புனித காணிக்கை  அன்னை ஆலயத்தில்  தேர்பவனி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை  கோஸ் மான் ஆரோக்கியராஜ் தலைமையிலும் இணை பங்கு தந்தை தார்தீஸ் முன்னிலையிலும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு  கூட்டு திருப்பலி நடைபெற்றன.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித காணிக்கை மாதா ஆடம்பர தேரில் எழுந்தருளி தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.

தேர் பவனியின் போது, பக்தர்கள்  மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad