குடந்தையில் கோயிலை மறைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றக்கோரி சிவ சேனா கட்சி சார்பில் புகார் மனு.
கும்பகோணம் சிவசேனா கட்சி சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொற்றாமரைக் குளம் கிழக்குக் கரையில் பல வருடங்களாக மறைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர் ஆலயம் அறநிலைத் துறையால் அதிரடி ஆய்வு நடைபெற்றது.
உடனடியாக இந்த கோயிலை முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு ஏதுவாக செய்ய வேண்டும் என குடந்தை மாநகர தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார் இது நடைபெறாத பட்சத்தில் அனைத்து இந்துக்களையும் பக்தர்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என கூறினார்.
உடன் இருந்தோர் அகில பாரத இந்து மகா சபா பொதுச் செயலாளர் செந்தில் முருகன் சிவசேனா இளைஞர் அணி தலைவர் கமலக்கண்ணன் மற்றும் சிவசேனா கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளும் இருந்தனர்

No comments:
Post a Comment