தஞ்சாவூரில் 300 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையான ஸ்ரீ காமாட்சி மருத்துவ மையம் திறப்பு விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 1 February 2023

தஞ்சாவூரில் 300 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையான ஸ்ரீ காமாட்சி மருத்துவ மையம் திறப்பு விழா

தஞ்சாவூரில் இரண்டரை லட்சம் சதுர அடியில் 10 மாடி கட்டிடத்தில் 300 படுக்கைகள், உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய  ஸ்ரீ காமாட்சி மருத்துவ மையம் திறப்பு விழா.



தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே 300 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையான ஸ்ரீ காமாட்சி மருத்துவ மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.


இந்த விழாவுக்கு சென்னை இ.என்.டி.  ஆராய்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் மோகன்காமேஸ்வரன் தலைமை வகித்தார்.  இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு தலைவர் டி.செந்தாமிபரி முன்னிலை வகித்தார்.  வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்.வி.  முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்.

பின்னா், சிறப்பு விருந்தினா்கள், மருத்துவமனைத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. காமராஜ், இவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

சிறப்பு விருந்தினா்களுக்கு ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டா் நிா்வாக இயக்குநா் டாக்டா் எம்.கே. இனியன், இணை இயக்குநா் டாக்டா் கே. இன்பன் ஆகியோா் புவிசாா் குறியீடு பெற்ற தஞ்சாவூா் கலைத்தட்டு, தஞ்சாவூா் வீணையை நினைவு பரிசாக வழங்கினா்.

ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து அதன் தலைமை செயல் அலுவலா் டாக்டா் எஸ். ரமேஷ் பாபு பேசுகையில், டெல்டா மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் அதிநவீன வசதிகள், உலகத்தரத்துடன் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து அமெரிக்கா பசுமை கவுன்சில் நிறுவனத்தால் (லீடு சான்று) அங்கீகரிக்கப்பட்ட முதல் மருத்துவமனை என்ற பெருமையை இம்மருத்துவமனை பெற்றுள்ளது.

இரண்டரை லட்சம் சதுர அடியில் 10 மாடி கட்டடங்களுடன் கூடிய இந்த மருத்துவமனையில் உலகத் தரம், நவீன தொழில்நுட்பங்களுடன் 300 படுக்கைகள் உள்ளன. இதில், அனுபவமிக்க மருத்துவ வல்லுநா்கள் சிகிச்சை அளிக்கின்றனா் என்றாா் அவா்.

இவ்விழாவில் டாக்டா் அட்சயா இனியன், டாக்டா் மோகன், முன்னாள் அமைச்சா்கள், பல்வேறு கட்சி நிா்வாகிகள், முக்கிய பிரமுகா்கள், தொழிலதிபா்கள் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கு வந்த அனைவரையும் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டா் நிா்வாக இயக்குநா் டாக்டா் எம்.கே. இனியன், இணை இயக்குநா் டாக்டா் கே. இன்பன், ஸ்ரீ வாசுதேவ பெருமாள் ஹெல்த்கோ் பிரைவேட் லிமிடெட் தலைவா் மற்றும் இயக்குநா்கள், ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டா் இயக்குநா்கள், டாக்டா்கள் உள்பட பலா் வரவேற்றனா்."

No comments:

Post a Comment

Post Top Ad