தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு அறிவியல் கண்காட்சி.
இந்திய இயற்பியலார் சர் சி.வி.ராமன் ”ராமன் விளைவு” என்னும் ஒளிச்சிதறல் கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த பிப்ரவரி 28 ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறோம்.
"தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் செவ்வாய் கிழமை அனுசரிக்கப்பட்டது."
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான முனைவர். செபாஸ்டியன் பெரியண்ணன், முதல்வர், முனைவர் பி .பிலோமிநாதன் , நிர்வாகி எம். அரோன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர், சி. இராமச்சந்திர ராஜா பங்கேற்றுப் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பாக பேசினார்
கண்காட்சியில் மாணவ , மாணவிகள் தங்களின் கற்பனை திறனை மூலத்தனமாக கொண்டு பல்வேறு படைப்புகளை காட்சிக்காக வைத்திருந்தனர். இந்த அறிவியல் கண்காட்சியில் இக்கல்லூரி மாணவர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொண்டனர். தேசிய அறிவியல் தினமான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கற்றல் மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது
No comments:
Post a Comment