இந்தியன் வங்கி மூலம் விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி திட்டங்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இந்தியன் வங்கி மூலம் கடன் வசதி குறித்த சிறப்பு முகாம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.
முகாமில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இந்தியன் வங்கியின் மூலம் வழங்கக்கூடிய கடன் வசதி திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திரு எம் ஸ்ரீ ராமச்சந்திர பாபு தலைமை வகித்தார்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் கோ. வித்யா சிறப்புரை ஆற்றினார் உதவி மண்டல மேலாளர் சாய் பிரசாத் வங்கி மூலம் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மண்டல இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் அருண்குமார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய கடன் வசதி திட்டங்களை எடுத்து கூறினார். வேளாண்மை அலுவலர் த இரா. தாரா வேளாண்மை விற்பனை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குனர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் பு.கனிமொழி நன்றி கூறினார்
No comments:
Post a Comment