பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் விதி நாடகம் பயிற்சி
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் வீதி நாடகம் - பயிற்சி பட்டறை பிப்ரவரி 20 ந் தேதி முதல் 21ந் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது. சமூகப் பணித் துறையும் தமிழ்த் துறையும் இணைந்து இந்நிகழ்வை நடத்தினர்.கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரி டெரன்சியா மேரி, கல்லூரி முதல்வர் முனைவர் செ.காயத்ரி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் ஷெட் இந்தியா இயக்குநர் பாத்திமராஜ் IRDT மீடியா அகாடமியின் இயக்குநர் கெங்கை
குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக ப் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர் . பிற கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். வருங்கால தலைமுறைக்கு வீதி நாடகத்தின் சிறப்பினை உணர்த்தும் வகையில் இப்பயிற்சிபட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வினை சமூகப் பணித் துறைத் தலைவர் த.அலமேலு மற்றும் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சு சத்தியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment