ராஜகிரி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 9 February 2023

ராஜகிரி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ராஜகிரி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் 300 கால்நடைகள் பயன் அடைந்தன. 


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்று பேசினார். முகாமிற்கு தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் தலைமை வகித்து கால்நடை சிறப்பு முகாமினை துவக்கி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களுக்கு சிறந்த கன்று பரிசு, சிறந்த மேலாண்மை விருது ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். 



விழாவில் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி. அய்யாராசு , சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, , மண்டல இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பு டாக்டர் பாஸ்கரன், நோய் புலனாய்வு கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேலு, கால்நடை உதவி மருத்துவர்கள் அய்யம்பேட்டை ஏஞ்சலா சொர்ணமதி, சுந்தர பெருமாள் கோவில் கார்த்திகேயன்,கால்நடை ஆய்வாளர் சிவசக்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், பன்னீர்செல்வம், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வேளாண்மை இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன் வேளாண்மை உதவி அலுவலர்கள் திரிபுரசுந்தரி சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.


முகாமில் மாடு ,ஆடு, நாய் ,பூனை, கோழி ஆகிய 300 கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன இம்முகாமில் தடுப்பூசி ,சிகிச்சை , சினை பரிசோதனை, சினை ஊசி, கருசிதைவு நீக்கும் தடுப்பூசி, குடல் புழு நீக்கம் ஆகியவை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் தாது உப்புகளும் வழங்கப்பட்டது. முடிவில் கணபதி அக்ரஹாரம் கால்நடை உதவி மருத்துவர் சங்கமித்ரா நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad