தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் அரசு கொறடா கோவி. செழியன் ஏற்பாட்டில் மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? மாபெரும் கல்வி முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஏற்பாட்டில் மாபெரும் கல்வி முகாம் நடைபெற்றது. முகாமில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் வேலைவாய்ப்பிற்குரிய மேற்படிப்புக்கான பட்ட படிப்பு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த கல்லூரியில் படிக்கலாம்? என்கின்ற மாணவர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் முன்னாள் பேராசிரியர் ரவிச்சந்திரன், நல்லாசிரியர் செல்வகுமார், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் லோகமணி மற்றும் குளஞ்சியப்பா ஐஏஎஸ் பயிற்சி மைய நிறுவனர் குளஞ்சியப்பா ஆகியோர் மாணவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கி திருவிடைமருதூர், வண்ணக்குடி மற்றும் அம்மன்பேட்டை பகுதிகளை சேர்ந்த மூன்று பள்ளிகளில் இருந்து பங்கேற்ற 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் மேற்படிப்பிற்கான சந்தேகங்களை தீர்த்தனர்.
நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் சுபா திருநாவுக்கரசு, திருவிடைமருதூர் பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தர ஜெயபால், பள்ளியின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment