தஞ்சையில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி : மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 21 February 2023

தஞ்சையில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி : மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்

.com/img/a/

 IMG_20230221_210722_683
தஞ்சையில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி : மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்


தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை   இரயில் நிலையம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சிவகங்கை பூங்கா சென்றடைந்தது. தமிழ் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறை மாணவர்களின் கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்   கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். 

இதில் இருநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆட்சிமொழி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பில் துண்டு பிரசுரங்கள் அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் தமிழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன், பதிவாளர் முனைவர் சி.தியாகராசன். தஞ்சாவூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்  ஜ.சபீர்பானு , மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  பிரேமலதா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் மூத்த தமிழறிஞர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad