தஞ்சாவூரில் உள்ள கார்மல் குழந்தை ஏசு தேவாலய ஆண்டு விழாவையொட்டி தேர்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் நிர்மலா நகரில் கார்மல் குழந்தைஏசு ஆலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின், தினமும் காலை 6 மணி, 9 மணி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நவநாள் திருப்பலி நடந்தது.
மாலை ஆராதனையின் முடிவில் குழந்தை இயேசுவின் சிறிய தேர்பவனியும் அதனைத் தொடர்ந்து சிறப்பு ஆசீர்வாதமும் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் மாலையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் தேரை புனிதப்படுத்தினார். அதன்பின் புனித ஆராதனை நடைபெற்றது.
தேர்பவனி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. தேர்பவனியையொட்டி வாண வேடிக்கையும் நடைபெற்றது. இதில பங்குத்தந்தைகள், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அன்னை தெரசா அறக்கட்டளை தலைவர் சவரிமுத்து மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அன்னை தெரசா அறக்கட்டளையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

No comments:
Post a Comment