தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் திறன் போட்டி. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 2 February 2023

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் திறன் போட்டி.

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் திறன் போட்டி.



தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் கணினி அறிவியல் துறைச் சார்பாக வியாழக்கிழமை அன்று கல்லூரிகளுக்கிடையே கணினி அறிவியல் திறன் போட்டி “TECHINFLR 2K23" நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக் கிடையே கணினிஅறிவை வளர்க்கத் துணைசெய்யும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் Innovathon, Tech Buzz, Web creator, Code cracking, Fun Buzz, Amazing racer, Shoot me, Ad-Zap போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் 12 கல்லூரிகளிலிருந்து 240 மாணவ மாணவிகள் வருகைத்
தந்து பங்கேற்றனர். 

கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரி டெரன்சியாமேரி  முன்னிலையில், கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.காயத்ரி  தலைமையில்
நடைபெற்ற இவ்விழாவில் குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் M. சித்ராதேவி அவர்கள் வருகைத்தந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.


இவ்விழாவில் கணினி அறிவியல் துறை மாணவர்சங்கத் தலைவி வி.தேவிஸ்ரீ வரவேற்று பேசினார், மாணவர்சங்கத் துணைத்தலைவி க.பிரியதர்ஷினி நன்றி கூறினார். இந்நிகழ்வு கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவர் ந.விஜயலெட்சுமி,
பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளால் ஒருங்கிணைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad