மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து ஏஐடியுசி தஞ்சாவூர் அய்யாசாமி வாண்டையார் நினைவு பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தினசரி விலைவாசி உயர்வால் சராசரி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்படாததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொது செயலாளர் கே.அன்பழகன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் வி.சேவையா, பொருளாளர் டி.கோவிந்தராஜன்., மின் வாரிய சங்க துணைத் தலைவர் பொன்.தங்கவேல், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக பொதுச் செயலர் எஸ்.தாமரைச்செல்வன்,
ஓய்வு பெற்ற சங்கப் பொதுச் செயலர் பி.அப்பாதுரை மீனவர் சங்க மாவட்ட செயலாளர் நா.காளிதாஸ் பட்டுகைத்தறி சங்க மாவட்ட செயலாளர் கே.ராஜாராமன், நுகர் பொருள் வாணிப கழக சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் பி.சுதா மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கே.சுந்தரபாண்டியன், எம்.வெங்கடபிரசாத், டி.கஸ்தூரி, கே.கல்யாணி, ராஜகோபால், டி.தங்கராசு, ஆர்.பிரபாகர், எஸ்.மனோகர்,டி.ரெஜினால்டுரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment