தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு எதிரான, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் பேராவூரணி பெரியார் சிலை அருகே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், "ஏழைகளின் உணவு மானியம் ரூ ஒரு லட்சம் கோடி குறைத்ததை கண்டித்தும், விவசாயிகள் உரமானியம் 30,000 கோடி குறைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 29 ஆயிரம் கோடி குறைத்ததைக் கண்டித்தும், பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதி உதவி திட்டத்தில் இருந்து 800 லட்சம் விவசாயிகளை வெளியேற்றியதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதிநிலை அறிக்கையின் நகலை தீ வைத்து எரிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். இதில், ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்
செய்தியாளர் த.நீலகண்டன் .

No comments:
Post a Comment