நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், சமூக நல திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கரன், பேராவூரணி வட்டார கல்வி அலுவலர்கள் அங்கயர்கண்ணி, கலாராணி பேராவூரணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பேராவூரணி வளமையம் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி உபகரணம் 16 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
புதிய அடையாள அட்டை (NlD / UDID)வழங்க 15 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். உதவித் தொகை வழங்குவதற்கு 20 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துரை வழங்கி, ஆண்டுதோறும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணம் வழங்குவதற்கும், அவர்களுக்கான மூன்றுசக்கரம் வாகனம் மற்றும் தானியங்கி மூன்றுசக்கரம் வாகனம் வழங்குதாக கூறினர்.
பேரூராட்சி கவுன்சிலர் ஹபீபா பாரூக், மருத்துவர்கள் மனநல மருத்துவர் மங்கையர்கரசி, எலும்பு முறிவு மருத்துவர் கலைச்செல்வன் காது மூக்கு தொண்டை மருத்துவர் ராமசாமி கண் மருத்துவர் இலக்கியா கண் நுட்பவியலாளர் திரவியம், இயன்முறை மருத்துவர்கள் பழனிவேல் மற்றும் மணிமொழி சிறப்பாசிரியர்கள் மகாதேவி , சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனிராஜ் , மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் சிவமுருகன், மற்றும் சரவணன் , பேராவூரணி அரிமா சங்கத் தலைவர் இராமநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் த.நீலகண்டன் .

No comments:
Post a Comment