கோயிலை ஆக்கிரமித்துள்ள சுரேஷ் மெட்டல் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியரிடம் சிவசேனாகட்சி சார்பாக மனு கொடுத்தனர்.
கும்பகோணம் கோட்டாட்சியர் பூரணியம்மா அவர்களிடம்
சிவசேனா கட்சி சார்பாக மாநகரத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் ,அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன், சிவசேன கட்சி குடந்தை மாநகர இளைஞரணி தலைவர் கமலக்கண்ணன் ,அகில பாரத இந்து மகா சபாவின் இளைஞர் அணி தலைவர் ஆர் செந்தில்குமரன் ஆகியோர் மனு அளித்தனர்
அதில் கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சாரங்கபாணி கோவிலின் மேற்குபகுதியில் உள்ள பொற்றாமரைகுளம் கிழக்கு பகுதியில் உள்ள சுரேஷ் மெட்டல் கடையை ஆய்வு செய்ய கடந்த ஜனவரி மாதம் வியாழக்கிழமை அன்று சிவசேனா கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டு கடை உள்ளே ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், புராதனமிக்க சிற்பங்கள் நிறைந்த தீர்த்தவாரி மண்டபத்தை கோவில் செயல் அலுவலர் பழங்கால சிற்பங்களை அழிக்கும் நோக்கத்தோடு அந்த மண்டபத்தை வாடகைக்கு விட்டுள்ளார். கடையை அகற்றி ஆலயத்தை மக்கள் வழிப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்றும் தீர்த்தவாரி மண்டபத்தை சீரமைத்து கோவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம். தீர்த்தவாரி மண்டபத்தில் இருந்த பழங்கால சிற்பங்களையும் தூண்களையம் சுரேஷ் மெட்டல் கடை நிர்வாகம் தனது வியாபார நோக்கத்திற்காக சேதப்படுத்தியும், அந்த மண்டபத்தில் இருந்த மூன்று வாசல்களையும் அடைத்து மண்டபத்தை வியாபார கடையாக மாற்றியுள்ளார். எனவே சம்மந்தப்பட்ட சுரேஷ் மெட்டல் கடை நிர்வாகி மீதும் அதனை கண்டு கொள்ளாத சாரங்கபாணி கோவில் செயல் அலுவலர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தனர்
No comments:
Post a Comment