திருவையாறு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வட்டார வளமையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து 32 மையங்களில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருவையாறு தேரடியிலிருந்து பதியபாரத எழுத்தறிவு திட்டம் குறித்து நடந்த விழிப்புணர்வு பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பேரணி தேரடி துவங்கி சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது. இதில் சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பேரணியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நோக்கங்கள் குறித்தும் , மண்ணில் பிறந்த அனைவரும் கல்வி கற்க வேண்டும் ,முதுமை கல்விக்கு தடையில்லை, 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத அனைவருக்கும் எழுத்தறிவித்தல் மற்றும் எண்ணறிவித்தல் , கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம், வாக்காளர் உரிமை , உடல் நலமும் சுகாதாரம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment