பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்.
தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழா கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரி டெரன்ஸியா மேரி தலைமையிலும், கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.காயத்ரி முன்னிலையிலும் நடைபெற்றது.
இவ்விழாவில் தஞ்சாவூர் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் செட் இந்திய நிர்வாக இயக்குநர் .பி.பாத்திமராஜ் துவக்கி உரையாற்றினார் .சிறப்பு விருந்தினராக தலைமை தொழிலாளர் ஆணையர் என் கே தனபாலன் பேசுகையில் கொத்தடிமை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிடவும், தமிழகத்தைக் கொத்தடிமை இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், இன்றைய இளைய சமுதாயம் முழுமையாகத் தமது கடமையைச் செய்ய வேண்டும். என்பதையும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
வல்லம் காவல் ஆய்வாளர் திருமதி. எம். ஜெயந்தி மாணவர்களாகிய நீங்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வின் மூலமாக மக்களுக்குக் கொத்தடிமை குறித்த தகவல்களைக் கொண்டு செல்வது இன்றியமையாத ஒன்று என்பதை வலியுறுத்தினார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.பிரபு அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாகவும், வழுகட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு அமர்த்துவதும், தண்டனைக்குரிய குற்றறமாகும் எனவே கொத்தடிமைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அமைத்திட பாடுபடுவேன் என்ற உறுதி மொழியினை மாணவர்களுடன் இணைந்து எடுக்கச் செய்து வாழ்த்துரை வழங்கினார். சென்னை ஏஎச்டிசி அலுவலர் திரு G ஜி மைக்கோஸ்டீன் கொத்தடிமை ஒழிப்பு குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூகவியல் துறைத் தலைவர் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.முத்தழகி நன்றி கூறினார்
உதவிப்பேராசிரியர் த.அலமேலு அவர்கள் வரவேற்று பேசினார் கல்லூரியின் வழங்கினார்கள். இந்நிகழ்வு, சமூகவியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.
No comments:
Post a Comment