திருவையாறு அரசர் கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் சுயநிதி பிரிவு பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 42 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவையாறு அரசர் கல்லூரியில் தற்காலிக சுயநிதி பிரிவு பேராசிரியர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பேராசிரியர்கள் தங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை உடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தற்காலிக பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சுயநிதி பிரிவை சத்திரம் நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுயநிதி பிரிவு பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment