பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி
கும்பகோணத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழைத் தேடி என்ற தலைப்பில் எட்டு நாட்கள் விழிப்புணர்வு பயணத்தை 21ஆம் தேதி சென்னையில் தொடங்கி 28ஆம் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார். இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தமிழ் அறிஞர்களின் சிறப்புரைகள், இசை பாடல்கள் நடைபெறும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்கும் விழா தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை மாநில கௌரவத் தலைவர் ஜிகே. மணி வழங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஸ்டாலின், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோதை கேசவன், கஞ்சனூர் முருகன், வழக்கறிஞர் ராஜசேகர், சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர் முத்தூர் சுவாமிநாதன், தஞ்சை மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மதிவிமல், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் மண்டபம் கலியமூர்த்தி, பசுமை தாயக மாவட்ட செயலாளர் காரல் மார்க்ஸ், மாவட்ட இளம் பெண்கள் செயலாளர் சத்தியநாயகி, பாமக மாவட்ட துணை தலைவர் மருதையன், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment