பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாள் : பாபநாசத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவை தோற்றிவித்தவருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது .
தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக திமுகவினர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
கோவி.அய்யா ராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment