ஹெல்மெட் அணிந்து இரு சக்கரவாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.
தஞ்சாவூர் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலக வளாகத்தில் விபத்தில்லா பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
மேலும், பேரணியில் ஹெல்மெட் அணிந்தும், மோட்டார் சைக்கிளில் பயணித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிள்ளையார்பட்டி வரை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் செல்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் டாக்டர் வரதராஜன், மாவட்ட துணை தலைவர் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கூடுதல் போலீஸ் சாமிநாதன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கீதா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் தமிழ்ச்செல்வன், போக்குவரத்து விபத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் தங்கராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர். மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment