தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வி மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு நாள் சர்வதேசக் கருத்தரங்கின் தொடக்க விழாவில்
முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் பேசுகையில், ''தமிழ்மொழி கற்பித்தலில் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் வர வேண்டும் என்று. முன்பு புத்தகங்களில் நோட்ஸ் செய்து பாடம் நடத்தப்பட்டது. ஆனால், செல்போன், ஸ்மார்ட் போன் என தொழில்நுட்ப வளர்ச்சியால் பாடம் நடத்த முடியாது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் இன்டர்நெட் மூலம் உடனுக்குடன் பார்க்கலாம்.
எனவே, நடைமுறையில் உள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் உயர்கல்வி நவீன காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியடையும். அது தமிழ் மொழிக்கும் பொருந்தும் என்றார் சுப்பிரமணியம்.
விழாவுக்கு வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மொழி கற்கைகள் துறைத் தலைவர் கலா சந்திரமோகன் கருத்துத் தெரிவித்தார். கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா சமரா பல்கலைக்கழக பேராசிரியர் சின்னையா அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் கு.சின்னப்பன் சிறப்புரையாற்றினார். பதிவாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர் இரா. சீனிவாசன் வரவேற்றார். நிறைவாக, சமூக அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் மா. அறிவானந்தன் நன்றி கூறினார். பின்னர் மாலையில் திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி மாணவர்களின் கலைக்கல்வி குறித்த நிகழ்ச்சி நடந்தது. மேலும் பேராசிரியர் கு.சின்னப்பன் திருநங்கையர் வாழ்க்கை வரலாறு, தமிழ் இலக்கணம், இலக்கியத்தில் திருநங்கை, தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கை, தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கை சித்தரிப்பு ஆகிய 4 நூல்களை வெளியிட்டார் .கருத்தரங்கின் நிறைவு விழா இன்று மாலை நிறைவடைகிறது

No comments:
Post a Comment