தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் .பேராவூரணி எம்எல்ஏ பேச்சி. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 4 February 2023

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் .பேராவூரணி எம்எல்ஏ பேச்சி.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் .பேராவூரணி எம்எல்ஏ பேச்சி.




தஞ்சாவூர் மாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைப்பெற்றது இக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்  S.S.பழநிமாணிக்கம் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மருத்துவ அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முதுமொழிக்கேற்ப மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட, மாநகர, நகர, பேரூர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் நிறை, குறைகள், தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. 


கூட்டத்தில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் அவர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனை 40 ஆண்டுகள் பழமையானது மிகவும் பழுதடைந்துள்ளது மாதம் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் வெளி நோயாளிகள் நாள் ஒன்றுக்கு 700 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர.ஆகவே நவீன வதிகளுடன் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் புதுப்பித்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை கூடுதலாக நியமித்திடவும். ஒட்டங்காடு, மல்லிப்பட்டிணம் ,வெட்டுவா கோட்டைஆகிய ஊர்களில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், புனல்வாசல், செந்தலை, ரெட்டவயல், மணக்காடு ஆகிய ஊர்களில் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் செவிலியர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad