தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க புதிய ஆப் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை தொடங்கி வைத்த மேயா் சண். ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாநகராட்சியின் 51 வார்டுகளிலும் உள்ள மக்கள் இந்த புதிய செயலி மூலம் தங்களது குறைகளை தங்கள் வீடுகளில் தெரிவிக்கலாம்.
குப்பை, தேங்கி நிற்கும் கழிவுநீர், கால்நடைகளால் தொல்லை ஏற்பட்டால், போட்டோவுடன் தெரிவித்தால், உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து துறை அலுவலர்களும் செயலியில் பதிவான குறைகளை கண்காணித்து வருவதால், உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தேவையான சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில், குடிநீர், சாக்கடை, சொத்து வரி செலுத்த விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார் மேயர்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கே.சரவணக்குமார், செயற்பொறியாளர் எஸ்.ஜெகதீசன், மணக் நல அலுவலர் வி.சி. சுபாஷ் காந்தி, உதவி செயற்பொறியாளர் எம்.ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்."

No comments:
Post a Comment