தஞ்சையில் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் சார்பில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடந்தது.பேரணிக்கு மாநிலத் தலைவர் அருணா அஜீஸ் தலைமை தாங்கி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில் நாட்டின் முன்னேற்றம், சமூகபொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து வசதி என்பது முக்கியமானது. இந்தியாவில் சரக்கு போக்குவரத்து, சாலைகள் வழியாக நடக்கிறது. வாகன பெருக்கத்தினால் லட்சக்கணக்கான விபத்து ஏற்பட்டு பல லட்சம் உயிரிழப்பு ஏற்படுகிறது.
மக்கள் தானாக முன்வந்து தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்,சிவசேனா மாநில செயல் தலைவர் க,.சசிகுமார் முன்னிலை வகித்தார். கும்பகோணம் மாநகரத் தலைவர் பூக்கடை ஆனந்த,மாவட்ட அமைப்பாளர் சரவணன்,மாவட்ட பொது செயலாளர் வினோத் ராவ், மாநகரத் தலைவர் குருமூர்த்தி, ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் டென்னிஸ் ராஜ்,மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரனேஷ் இன்பன்ட்ராஜ், மாவட்ட ஆலோசகர் ஆரோக்கியசாமி, மாவட்ட அமைப்பாளர் ரெங்கராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் செயலாளர் கருணாகரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சற்குணம்,மாவட்ட தகவல் நுட்ப பிரிவு துணைச் செயலாளர் மதன் குமார்.நிர்வாகிகள் ஜோயல் ,டேவிட் ஜான், ராஜா, பிரபு ,ஹரிஹரன் பிரகதீஷ், விக்னேஸ்வரன் ,கண்ணன் செல்வராஜ் ,கமல் மற்றும் பலர் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம், மாநிலத் தலைவர் அருணாஅஜீஸ்.ஹெல்மெட் அணிந்தவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகளான சிவகங்கை பூங்கா, தெற்கு வீதி ,கீழ் வாசல் வண்டிக்கார தெரு , தொம்ப குடிசை, ரயிலடி,அண்ணா நகர்,காலனி நாஞ்சிக்கோட்டை பைபாஸ்ல் நிறைவடைந்தது
செய்தியாளர்: இரா. ஏசுராஜ்
No comments:
Post a Comment