தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, 11 வது வார்டு கவுன்சிலர் ,மகாலட்சுமிசதீஷ்குமார் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்திசேகருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது,
பேராவூரணிமெயின்ரோடு ஆவணம்ரோடுஇணைப்பில் தந்தை பெரியார் சிலை எதிரே ஆவணம் சாலையில் உயர் மின் கோபுரவிளக்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக எரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி காரணமாக உயர் மின் கோபுரவிளக்கு அகற்றப்பட்டது. சாலை விரிவாக்க பணி முடிந்து 8 மாத காலங்கள் ஆகியும் அந்த விளக்கு அவ்விடத்தில் பொருத்தப்படாமல் இருக்கிறது .இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவ -மாணவியர்கள், பெண்கள் என அனைவரும் அந்த இடத்தை கடக்கும் பொழுது விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த உயர் மின்கோபுர விளக்கை அதே இடத்தில் போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் கூறியுள்ளார்.மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி பெருந்தலைவர் உடனே அமைத்து தருவதாக உறுதி அளித்தார்
செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment