தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தென்னங்குடி அருள்மிகு காலபைரவர் கோயில் ( பிதுர் தோஷ பரிகார ஸ்தலம்) ஸ்ரீ ஏகாதச மஹாருத்ர யாக விழா நடைபெற்றது.நேற்று மாலை அனுக்கை, விக்னேஷ்வரபூஜை, கும்ப அலங்காரத்துடன் ஆரம்பித்து, தேய்பிறை அஷ்டமி தினமான இன்று காலை விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், ருத்ரதிரிசதி, அர்ச்சனை, ஏகாதச மஹாருத்ர யாக விழா மங்கல இசை,கைலாய வாத்தியத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்னங்குடி, திருப்பூரணிக்காடு, கொன்றைப் காடு, கள்ளங்காடு, குருவிக்கரம்பை, களத்தூர், பேராவூரணி, ஆவணம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள், பக்தர்கள் 10000 பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் த.நீலகண்டன் .

No comments:
Post a Comment