தஞ்சையில் புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா.
தஞ்சாவூர் புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் கல்லூரியில் 12-வதுபட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தது. இதில், இளங்கலை நர்சிங் மாணவிகள், 20 பேர் மற்றும் முதுகலை மாணவிகள், 14 பேருக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.புதிதாக நர்சிங் படிப்பில் சேர்ந்த மாணவியரின் விளக்கேற்று விழாவும் நடந்தது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன், டாக்டர் ஆர்.பாலாஜிநாதன், எம்.டி.,குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தஞ்சை மாநகர மேயர் சண் .ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளை ரேங்க் பெற்றவர்களை கவுரவித்து உரையாற்றினார்.
தொடர்ந்து OLHSCON கரெஸ்பாண்டெண்ட் திருத்தந்தை. டி டி.ஞானப்பிரகாசம் பேசுகையில், ''நர்சுகள் தியாக உணர்வுடனும், உண்மையுடனும் செயல்பட வேண்டும், என்றார். முன்னதாக,சமூக சுகாதார செவிலியர் துறை தலைவர் பேராசிரியர் என்.கௌரி வரவேற்று பேசினார் .OLHSCON கல்லுாரி முதல்வர் பேராசிரியர் பி சகாயமேரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு உறுதிமொழியை முன்மொழிய , அதைத் தொடர்ந்து பட்டதாரிகள் கௌரவ ஆடை அணிந்து தொழில்முறை அர்ப்பணிப்புடன் உறுதிபூண்ட பின்னர் சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினராகளால் பட்டமளிப்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பட்டப்படிப்பு அறிவித்து பட்டம் வழங்கினார.கல்லூரி ஆசிரியர் எம். எஸ் கீர்த்தனா நன்றி கூறினார்.

No comments:
Post a Comment