தமிழ் பல்கலைகழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கின் நிறைவு விழா
தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வி மற்றும் மேலாண்மைத் துறை நடத்திய சர்வதேசக் கருத்தரங்கின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சர்வதேச கருத்தரங்கு நிறைவு விழாவில் துணைவேந்தர் டாக்டர் வி. திருவள்ளுவன் தலைமை தாங்கி கூறியதாவது தமிழை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில் இதுபோன்ற சர்வதேச கருத்தரங்கு தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்ப் பல்கலைக்கழகம் எடுத்து வருவதாகவும், அதற்கான பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மு.திருமலை சான்றிதழ் வழங்கி நிறைவுரையில் பேசிய போது இலக்கியங்களை பல்வேறு பரிணாமங்களில் புரிந்து அறிவு தேவை என்றும் அதற்கு கொள்வதற்கும் பல்துறை பாட அறிவு தேவை சிலப்பதிகாரத்தில் உள்ள கண்ணகி கோவலன் ஆகியோர்களைப் பற்றி விளக்கவுரையாக உளவியல், பண்பாடு பொருளாதாரம், மானுடவியல். தத்துவம் வரலாறு போன்ற பாட அறிவோடு பார்க்க வேண்டும் என அழகாக உரையாற்றினார், இவ்விழாவில் முனைவர் உமா அழகிரி முதுநிலை விரிவுரையாளர்.
தமிழியல் துறை மகாத்மா காந்தி நிறுவனம், மொரீசியசு. அவர்களும் மற்றும் முனைவர் சி.பி.ஷபீக், உதவிப் பேராசிரியர், கல்வியியல் துறை நிஷ்வா பல்கலைக்கழகம், ஓமன். ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இலங்கையைச் சேர்ந்த கல்விமுதுமாணி மாணவன் த,ந.கோவேந்தன். கருத்தரங்கப் பின்னூட்டம் வழங்கியனார். முனைவர் இரா.சு.முருகன், இணைப்பேராசிரியர், மொழிபெயர்ப்புத் துறை மற்றும் மக்கள் தொடர் அலுவலர், ஆகியோர் வரவேற்று பேசினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்புச் செயலர் முனைவர் கு.சின்னப்பன்,, நன்றி கூறினர்.
நெறியாளுகை முனைவர் க.முருகேசன், கௌரவ உதவிப் பேராசிரியர், கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை. நிகழ்ச்சி மேலாண்மை முனைவர் த.ராகேஷ் சர்மா, உதவிப் பேராசிரியர் செ.பிரபாகரன் மற்றும் இக்கருத்தரங்கில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், புலத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவல் நிலைப்பணியாளர்கள், பதினைந்து நாடுகளில் இருந்து இருபத்து ஒன்று கருத்தாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றார்கள்.

No comments:
Post a Comment