காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இல்ல திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்துள்ள கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்றும், தங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை. எதிரணியில் வேட்பாளர் அறிவிப்பதில் கூட பெருங்குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம் பாஜகதான் என்றும், பாஜகவின் நிலைப்பாடு கூட இருப்பவர்களை பழிவாங்குவது தான் என்றும், மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணியில் இருந்தவர்கள் தான் சிவசேனா அந்த கட்சியை இரண்டாக உடைத்ததுடன், உடைக்கப்பட்ட ஒரு அணியில் ஒருவரை முதல்வர் ஆக்கியது. இதே போல் கோவாவில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியது.
தற்போது தமிழகத்தில் அண்ணா திமுகவை இரண்டு அணியாக பிரித்துள்ளது. தற்போது எந்த அதிமுக அணி அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்பது என தெரியாமல் பாஜக உள்ளது என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்தார். ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வருவாரா என கேட்டதற்கு, அவர் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், எங்களது அணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் திறம்பட வழி நடத்தி வருகிறார் .
மகாபாரதத்தில் கிருஷ்ணரை போல் ஸ்டாலின் தற்போது எங்கள் கூட்டணியை வழி நடத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சமீபத்திய மழையினால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு, தமிழகத்தில் விவசாய துறை சிறப்பாக செயல்படுகிறது. அதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து வருகிறது என தெரிவித்தார்.

No comments:
Post a Comment